ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 7

அத்தியாயம் - 7 தன் தொழில் தொடர்பில், உருவாகிய எதிரி, தன்னை அழிக்க வல்ல பொறிகளை ஆராய்ந்து, திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அனு, தன் வேலைகளை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தாள். ஹரிஷிடம் கூறியதுப் போல, இரு நாட்கள் கழித்து, அவனோடு வெளியே செல்வதால், இன்று முக்கியமான விடயத்துக்காக, அபாயம் இருந்தாலும், துணிந்து செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து, செயலில் இறங்கினாள். "ஆன்ட்டி, என் வேலை விஷயமா வெளியேப் போறேன்... வர எப்படியும் லேட்டாகும்.. அண்ட் போன் சைலெண்ட்ல போட்டிருப்பேன்.. கூடுமான வரைக்கும் எனக்கு கால் பண்ணிடாதீங்க" என்று அனு, கூறியபடியே வெளியே செருப்பை மாட்ட, சாரதா, "பார்த்து பத்திரமா இரு.. ஜாக்கிரதை.. பெப்பர் ஸ்பிரே.. ஸ்டன் கன் எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்று எச்சரிக்கை கலந்த கவலையுடன் வினவ, அவளோ சிரித்தாள். "ஐயோ ஆன்ட்டி, இத்தனை வருஷம் என்னை நானே தான் பாத்துக்கிறேன்.. இனிமேலும் அப்படித் தான்.. அதனால, அனாவசியமா கவலைப்படாம இருங்க..." என்றவள், மாலையில் கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பிய ஒருமணி நேரத்தில், வீடு வந்து சேர்ந்தான் யாழ். தன்னை ஆசுவாச...