Posts

Showing posts from May, 2022

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 8

  அத்தியாயம் - 8 "என்ன தான் நீ பையனா காட்டிக்க வேஷம் போட்டாலும், ஒரு சில விஷயம் பட்டவர்த்தனமா காட்டிக் கொடுக்கும்" என்று கூறியவாறே யாழின் விழிபார்வை சற்றே கீழே இறங்கியது. மேலும் யாழ், "என்ன சொல்ல வரேன்னா..." என்று முடிக்கும் முன்பே அனு டேய் என்று மிரட்டும் தொனியில் அழைத்தபடி அவனது இன்னொரு பாதத்தையும் ஓங்கி மிதித்தாள். "அம்மா......." என்று வலியில் கத்த, அவளோ 'ஷ் ஷ்' என்றாள். அவனது கூச்சலில், உள்ளே சாரதா அறையில் விளக்கு ஒளி பெற்றதை கண்டாள் அனு. தன் மாமியார் வெளியே வந்து என்னவென்று கேட்பதற்குள், நொடியில் அவன் அருகே சென்று வலக்கையால் வாயை மூடப் போக, அவளது காலணி அவளுக்கே எதிரியாகி, தடுமாறி யாழ் மேலே மோதினாள். அவள் சட்டென்று மோத, அவனோ சற்றே நிலை தடுமாறி அவளை அணைத்துக் கொண்டான். கண்கள் கலந்தன...  வெளியே வந்த சாரதா கண்டது, இருவரும் கட்டுண்டு இருப்பதைத் தான். சிறு யோசனைக்குப் பிறகு, மெல்லிய புன்னகையோடு மீண்டும் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். யாழ், "உனக்கு ஒன்னும் ஆகலையே?" என்று தவிப்போடு கூடிய அக்கறை குரலில் கேட்டான். அவளும், "ம்கூம்...