ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 1

அத்தியாயம் - ஒன்று கடலில் நீந்தி மிதந்து செல்லும் கப்பலில் பயணம் செய்வதே அலாதி சுகம். அதிலும் நடுக்கடலுக்குச் சென்று பிரம்மாண்டமான கப்பலில், மனதிற்குப் பிடித்தப் பெண்ணை தன் சரிப் பாதியாகவும், வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கவும் தேர்ந்தெடுத்துத் திருமணம் புரிவதை நினைத்து எவ்வளவு ஆர்பரிப்பும், சந்தோஷமும் ஏற்படும்!.! அந்தமான் தீவில், ஒரு பெரிய கப்பலில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மணமேடையில், அமர்ந்திருந்தவன் முகம் களையற்று, ஏதோ ஒருவகை யோசனை ரேகைகளை சுமந்திருந்தது. அவன் யாழினியன். அவன் அருகில் மணப்பெண்ணாக அமர்ந்தவளின் விழிகளோ, வாயிலையும், தன்னருகில் இருக்கும் வருங்கால கணவனையும் மாறி மாறி பார்த்தாள். அவளின் தவிப்பு, அவனுக்கு இல்லையோ? அல்லது இருந்தும் இல்லாததுப் போல நடிப்போ? என்று ஒரு பக்கம் குழம்பவும் செய்தாள். யாழினியன் மற்றும் அனுலேகாவின் சந்திப்பு... அது சந்திப்பே இல்லை. விதிவசத்தால், முக்கியமான நாளில், இருவரும் விழிகளால் நோக்கினர். அவ்வளவே!?. எதையோ சொல்ல வந்தவளை, பிடித்து யாரென்றே தெரியாதவன் அருகில் அமர வைத்துவிட்டார்கள். அவனோ, மனதில் நினைத்தவளை விட்டுவிட்டு, எவளோ ஒ...