ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் - 4
அத்தியாயம் - 4
விமானம் இரண்டரை மணிநேரத்தில் சென்னையில் தரை இறங்கியது.
உள்நாட்டு விமானம் என்பதால், குறைந்த அளவிலான பரிசோதனை முடிந்து, தங்கள் உடமைகளை கன்வேயரில் இருந்து எடுத்துக் கொண்டு, வெளியே வந்தனர்.
அவர்கள் வெளியே செல்ல, அனுலேகாவிற்கு, அலைபேசி தான் இருப்பதை உணர்த்த, எடுத்து யாரென்று பார்த்தவள், ஒரு நொடி திடுக்கிட்டாள். ஏனென்றால், அழைத்தது அனு என்கிற ஐஷ்வர்யா.
உடனே, யாழினியன் கண்டு விடாமல், அலைபேசி ஒலியை அமைதிப்படுத்தி, தன் ஜீன்ஸினுள் திணித்தாள்.
அவனோ, அவளை விசித்திரமாகப் பார்த்து, "ஏன் ஃபோனை எடுக்க வேண்டியது தானே?"
"அது.. இல்ல எனக்கு பொது வெளியில் ஃபோன் பேசிப் பழக்கமில்ல.. நான் ரூமுக்குப் போய் பேசிக்கிறேன்" என்றதும், அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்து நோக்கினான்.
"அப்ப நான் கிளம்பறேன்.. இது தான் என் ஹாஸ்டல் அட்ரஸ்" என்று ஒரு சின்ன தாளில், தன் அலைபேசி எண்ணையும், முகவரியையும் குறித்துக் கொடுத்தாள்.
அதனை கையில் வாங்கியவன், அந்த தாளில் பார்வையை ஓடவிட்டாலும், அதே கணம், அவளின் கையைப் பிடித்து அவள் செல்வதைத் தடுத்து நிறுத்தினான்.
அவனின் தொடுகையை உணர்ந்தவள், ஆச்சரியமாக திரும்பி அவனை பார்த்தாள்.
"என்ன?" என்று கேட்டுத் தன் கையை அவன் பிடியிலிருந்து மெதுவாக விலக்கி விட்டாள்.
அவனோ, "ஒரே கேள்வியை பலமுறை கேட்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது.. இருந்தாலும் இந்த ஒரு தடவை கேட்டுடறேன்... நீயும் ஞாபகம் வெச்சுக்கோ.. உனக்கு புத்தி இருந்தால்!!" என்று இடைச்செருகளோடு நிறுத்த,
"என்ன கேள்வி?"
"நீ உண்மையாவே லூஸா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?"
"ஹலோ மிஸ்டர்.. என்ன கிண்டலா?"
"ஆமா... கல்யாணம் ஆகி ஹனிமூன் போயிட்டு வந்துட்ட அப்புறம், புருஷன் வீட்டுக்குப் போகாம, நான் திரும்ப ஹாஸ்டல் போறேன்னு ரயில் பயணி மாதிரி சொல்லிட்டு போற?"
"ஓஹோ ஓ... நான் உன் பொண்டாட்டி ன்னு ஒத்துக்கறியா..?" iஎன்று முதல் நாள் அவன் பேசியதை நினைவுறுத்தும் விதமாக நக்கலடித்தாள்.
"நான் ஒத்துகிட்டாலும், ஒதுக்காம போனாலும், வீ போத் ஆர் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் (we are husband and wife). இந்த பந்தத்தை குறைந்தபட்சம், ஒரு வருஷ காலத்துக்கு மாத்த முடியாது. கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் வேற.. நமக்கு வேற வழியில்லை.. சோ நீ என் கூட வீட்டுக்கு வந்து தான் ஆகணும்"
உடனே அவளோ, "உன் கூட உன் வீட்டுலயா?! இந்த நாலு நாள் உன் கூட இருந்ததே, எனக்கு கொடுமையா இருந்துச்சு" என்றாள் வீராப்பாக!..
அவனுக்கும் கோபம் துளிர்த்தது. "இங்க பாரு.. இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. அனாவசியமா என்னை சீண்டாம இருந்தா உனக்கு நல்லது... இல்லன்னா, அப்புறம் விளைவுகள் கடுமையாக இருக்கும்...
அப்படியென்ன உன்னை கொடுமைப்படுத்திட்டேன்..? உன்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போய் ஃபர்ஸ்ட் நைட்டா கொண்டாடினேன்..?" என்று எரிச்சலுடன் கேட்டக் கேள்விக்கு, பதில் சொல்லும் முன், ஏர்போர்ட்டில் உள்ள கால் டாக்சி புக் செய்தபடி அவர்கள் அருகில் வந்து நின்றது.
அவன் ட்ரைவருடன் பேசிவிட்டு, தன் உடைமைகளை மட்டும் காருக்குள் ஏற்றியவன், திரும்பி அவளிடம் கேட்டான்.
"இப்ப ட்ராமா போடாம, என் கூட வீட்டுக்கு வர்றியா இல்லையா? என் அம்மா நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க! அப்படி நீ வரலைன்னா, எனக்கு ஒன்னும் இல்ல, நீயே உன் ஆன்ட்டிகிட்ட, காரணத்தை சொல்லிக்கோ" என்றதும்,
"இவ்வளவு நேரம் இவன் பேசினது எல்லாம் டிராமா இல்லையாமா?" என முணுமுணுத்துவிட்டு, காருக்குள் ஏறினாள். அவனும் ஏறியதும், ஒரு ஓட்டல் பெயரை சொல்லி, அங்கே செல்ல டிரைவரை பணித்தான்.
அவள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க, அனல் தெறிக்கும் பார்வையை வீசினான். அதுக்கெல்லாம் பயந்து நடுங்குபவளா அனுலேகா.. அவளும் சுட்டெரிக்கும் பார்வையை வீச, அவனோ, "கொஞ்ச நேரம் அமைதியா வா" என்றான் அடிக்குரலில்.
ஓட்டல் அறைக்குள் சென்றதும்... "இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? என்கிட்ட சில்மிஷம் பண்ண நினைச்ச ன்னு வை... கொன்னுடுவேன் உன்னை"
"உன்னோட சரசமாட எனக்கு நேரமில்லை.. இந்த ரூம் ரெஃப்ரெஷ் ஆக புக் பண்ணேன்.. அவ்வளவு தான்.. இப்பவும் சொல்றேன்.. இந்த கல்யாணத்துல, ஏமாந்து நிக்கறது நான் தான். ரெண்டு பொண்ணுங்க சேர்ந்து என்னை ஏமாத்தியிருக்கீங்க.."
"... போதும் இதையே நான் நூறு தடவை கேட்டு என் காது புளிச்சுப் போச்சு.. இப்ப நான் என்ன பண்ணனும்?.." என்று அவள் காதை பொத்திக் கொண்டு கேட்க,
"இங்க நீ திரும்பவும் குளிக்கனும்னா, பாத்ரூம் அங்க இருக்கு.. இல்ல முகம் மட்டும் கழுவி ட்ரெஸ் மாத்திக்கனும் ன்னாலும், உன் இஷ்டம்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு கிளம்பனும்"
"கல்யாணத்துக்கு கட்டிக்கிட்ட பட்டுப்புடவை, உன் பெட்டிக்குள்ள தான் இருக்கு.. எடுத்து தர முடியுமா?"
சிறு யோசனைக்குப் பிறகு, "இரு வரேன்," என்றவன் பெட்டியைத் திறந்து, வேறு ஒரு அழகிய போச்சம்பள்ளி புடவையை எடுத்து வந்து, "இந்தா இதை கட்டிக்கிட்டு வா" என்று அவளிடம் தந்தான்.
"இது?" என்று ஐயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, அவள் கேட்க,
"அவனும் ஒரு முறை, அப்புடவையை ஆழ்ந்துப் பார்த்து, பின், "இது என் புது மனைவிக்காக வாங்கினது... இப்ப நீ தான் என் பொண்டாட்டி என்பதால் உனக்கு தரேன்... ஹர்ரி அப்.. டைம் ஆயிடுச்சு" என்று நகரப் போனவன்,
அவளிடம் திரும்பி, "என்னை கேள்வி கேட்கிற உரிமை உனக்கு இல்ல ன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்" என்று நகர்ந்தான்.
"சரியான கற்கால மனுஷன்" என்று அவளும் அவனை சாடிவிட்டு, பாத்ரூம் கதவை அறைந்து சாத்தினாள்.
சரியாக அரைமணி நேரத்தில் தயாராகி வெளியே வந்தவள், முதலில் கண்டது வேஷ்டி சட்டையில் இருந்த யாழினியனை தான்.
அவனின் மிடுக்கும் கம்பீரமும், அவளை தன்னை மீறி, "வாவ்" என்று வாய்விட்டு சொல்ல வைத்தது.
அவளின் வாவ் என்கிற சத்தத்தில், "என்ன" என்று நிமிர்ந்தவனும், அவளின் உருவத்தைக் கண்டு, திருப்தி பட்டுக் கொண்டான்.
ஆனாலும், அவளை போல, தன் எண்ணத்தை பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவில்லை.
"உன் செலெக்ஷன் அழகா இருக்கு ஹார்ப்.. பரவாயில்ல டேஸ்ட்ஃபுல் ஆளு தான் நீ!" என்று வெளிப்படையாகக் கூறியவள், ஒரு நிமிடம் மனதுக்குள், "இது இரவல் சாரி தான்... எனக்கு கொடுத்த சாரி மட்டும் இல்ல; அவனும் தான்!!" வருத்தத்துடன் எண்ணியவள், வெளியில் முக மாற்றத்தை வெற்றிகரமாக மறைத்தாள்.
"ம்ம்.. கிளம்பலாமா?" என்று கேட்டுவிட்டு தலையாட்டியதும் இருவரும் ஹோட்டல் அறையை காலி செய்து நேரே வீட்டுக்குச் சென்றனர்.
வீட்டுக்கு செல்லும் முன், அவளிடம், "பசிக்குதா? ஏதாவது சாப்பிடறியா?" அக்கறையுடன் வினவ, அவளோ, ஆச்சரியத்துடன் ஏறிட்டு நோக்கினாள்.
அதை கண்டு, இரு புருவத்தை ஏற்றி இறக்கி, "என்ன" என்ற பொருள் பொதிந்தக் கேள்வியை, மௌனமாக கேட்டான்.
அனுலேகா, "ஒன்றும் வேண்டாம்" என்றதோடு, முகத்தை காரின் ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவர்கள் கால் டாக்சி நேரே சென்று ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்குள் நின்றது. முதலில் இறங்கிய அனு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். அதற்குள் அவனும் இறங்கிய பின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தனர். அவர்கள் வசிக்கும் வீடு பதினான்கு மாடியில்.
அவர்கள் வீட்டு வாயிலில், காத்திருந்த சாரதா, "மன்னிச்சிடுமா" என்று கூறி தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்தார்.
"உள்ள வா" என்று அழைத்துச் சென்ற மாமியாரை, "எதுக்கு ஆன்ட்டி மன்னிப்புக் கேட்டீங்க?"
அவர்கள் பேசும் மொழிகள் தனக்கு சம்பந்தமில்லாதது என்று சொல்லாமல் சொல்லி தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான். அவர்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.
"இங்கே யாரும் எனக்கு பழக்கமில்லடா அனு.. இந்த ஃபிளாட்டுல யாரும் யாரோடையும் பேச மாட்டேங்கிறாங்க.. எல்லா கதவும் பூட்டினது, பூட்டினப்படியே இருக்கு.. அதுல மனுஷன் இருக்காங்களா இல்லையான்னே தெரியல.. அதான் அவசரத்துக்கு நானே உங்களுக்கு ஆரத்தி எடுக்க வேண்டியதாப் போச்சு" என்று வருத்தப்பட,
அங்கிள் (யாழினியன் அப்பா) இல்லாததால், இப்படி பேசுகிறார் என்பதை புரிந்துக் கொண்டு, "இதுல தப்பு என்ன இருக்கு ஆன்ட்டி..?? உங்க பையன் நல்லாருக்கனும்ன்னு நினைக்கிற ஆள் உங்களை விட வேற யாரா இருக்க முடியும்? அதனால இதெல்லாம் நினைச்சு சங்கடப்படாதீங்க.. என் சாரு கண்ணா சோகமா இருந்தா மூஞ்சி நல்லாருக்காதே" என்று கன்னத்தைப் பிடித்து ஆட்டி சிறு வயதில் கொஞ்சுவதுப் போல மாமியாரைக் கட்டிக்கொண்டாள்.
அந்த நினைவில், சாரதாவும் அவள் தலையில் கை வைத்துக் கோதினார்.
அனுவுக்கு கூடவே யாழ் சிறு பிராயத்தில் கேலி செய்யும் வார்த்தைகளும் ஞாபகம் வந்தது.
"ஏய் மத்தன், என் அம்மாவை விடு... நீ கட்டிபிடிச்சாலே என் அம்ம்மா முதுகு நொறுங்கிடும்" என்று கூறி அவளை பிடித்து நகர்த்துவான்..
சாரதா, "யாழ் நீ தப்பு பண்ற.. எதெதுல கேலி செய்வதுங்கிற விவஸ்தை இல்லை... நீ அனுக்குட்டி கிட்ட சாரி கேளு" என்று அவனை கண்டித்தார். அதை அவனோ அவளோ காதில் வாங்கவேயில்லை.
அதற்கு அனுவின் அம்மா காமினி, "விடு சாரு.. சின்ன பசங்க... அவங்களா சண்டையை சரி பண்ணிக்கட்டும்... பசங்க சண்டையில நாம தலையிடக் கூடாது"
"இல்ல மினி.. இது ஒருத்தரோட உடல்வாகு வெச்சு என்ன கிண்டல் பண்றது முழுக்க முழுக்க தப்பு.." என்று அன்னையர்கள் இருவரும் பேசிக்கொள்ள,
அங்கே சிறுவர்களோ, "டேய் நான் மத்தங்கா (மலையாளத்தில் மத்தங்கா/ மத்தன்னா - பரங்கிக்காய்) ன்னா நீ..."
"ம்ம் சொல்லு மத்தங்கா குட்டி" என்று யாழ் மேலும் சீண்ட,
"நான் மத்தங்கா ன்னா நீ"
"என்ன அதுக்கு மேல நாக்கு பேச வரலையா? போ போய் ஒழுங்கா யோசிச்சு கத்துக்கிட்டு வா.." என்க, அனுக்குட்டி கண்ணில் பொலப்பொலவென, கண்ணீர் ஊத்தியது.."
அவள் அழுகை பொறுக்காமல், சாரதா, "அனுக்குட்டி நீ அவனை பார்த்து அல்லம் (தெலுங்கில் இஞ்சி) ன்னு சொல்லிரு டா." என்று எடுத்து கொடுத்தார்.
உடனே கண்ணை துடைத்துக் கொண்டு, விசும்பலுடன், "யாழ் நீ அல்லம் (இஞ்சி)" என்று சாரதா கூறியதுப் போல சொல்லி சிரித்தாள்.
அவள் சிரிப்பை கண்டதும், யாழினியனும் மெல்லிய புன்னகை சிந்திவிட்டு, தன் அன்னையை முறைத்து விட்டு, "எல்லாத்துக்கும் அழாத மத்தன் குட்டி.. பேச கத்துக்கோ" என்று சொல்லி தன் வீட்டிற்குள் சென்றான்.
இருவரும் பக்கத்து வீடு.. ஒரே பள்ளிக்கூடம்.. யாழ் பதினோரு மாதம் பெரியவன்.. பிள்ளைகளை வைத்து பெற்றோரும் நெருங்கி பழகி குடும்பமே நண்பர்கள் ஆகிவிட்டனர்.
"என்னடா என்ன யோசனை அனுக்குட்டி?" என்று சாரதா கேட்டக் கேள்வியில், சுயம் பெற்றாள் அனுலேகா.
"ஒன்னுமில்ல சாரு கண்ணா, ஏதோ பழைய எண்ணம்" யாழினியன் சென்ற பாதையை பார்த்தபடி புன்னகையோடு கூறவும்,
சாரதாவும் யோசனை செய்துவிட்டு, "யாழும் நீயும் சண்டை போட்டதை நினைச்சு சொல்றியா? இல்ல உன்னை சின்ன வயசுல கிண்டல் பண்ணதை சொல்றியா" என்று கேட்டார்.
"ரெண்டும் தான் ஆன்ட்டி" என்று தலையாட்டினாள் அதே புன்முறுவலுடன்.
"அப்போ உங்களுக்கு ரொம்பவே விவரம் புரியாத வயசு.. அதை நானும் அப்பப்ப நினைச்சு பார்த்து சிரிச்சுப்பேன்.. அப்பா அம்மா க்கு பிள்ளைகளோட விளையாட்டு எப்பவுமே ஒரு ட்ரெஷர் தான்"
"ம்ம்"
"ஆனா அனு இப்போ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்" என்றார் பீடிகையுடன்.
Nice episode akka. யாழினியன் நிமிஷத்துக்கு ஒரு தடவை மாத்தி மாத்தி பிஹேவ் பண்ணுறான். Nice going.
ReplyDeletenice ranju..... tebda yaazh thideernu apdi pesura? thideernju ipdi pesura? pavam da anu. porumaiya pesen da.... oho chinna vayasu friends ah???? ini aduthu nadakka povathu enna? waiting ranju
ReplyDelete