ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 5
அத்தியாயம் - 5
"அனு.. உன்கிட்ட ரொம்பவே முக்கியமான விஷயம் பேசனும்" என்று சாரதா கூறவும்,
அனுவும், "என்ன ஆன்ட்டி" என்று கேட்டாள். கூடவே, நடந்த திருமணத்தைப் பற்றி தான் கேட்கப் போகிறாரோ?! என்கிற ஐயமும் மனதுள் தோன்றியது.
"யாழ்க்கு உன்னோட நடந்தது விருப்பமில்லாத கல்யாணம் தான். அதுவும் என்னோட கண்டிஷனால தான், அவன் ஒத்துக்கிட்டான்னும் எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா அவனோட இயலாமையைக் காரணம் காட்டி உன் மேல கோபப்படலையே?" என்று கவலையுடன் வினவியரை, குழப்பத்துடன் நோக்கினாள்.
"அப்படி எதுவுமே இல்லை ஆன்ட்டி.. எனக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செஞ்சுக் கொடுத்தான். என் கூட ஷாப்பிங் வந்து ட்ரெஸ் செலக்ட் பண்ணிக் கொடுத்தான்" என்று உண்மையும் பொய்யும் கலந்துக் கூறியவள்,
மாமியாரை தலை சாய்த்துப் பார்த்து, குறும்புடன், "அப்படியே அவன் கோபப்பட்டாலும், இன்னும் என்னை எதற்கெடுத்தாலும் அழற உங்க அனுக்குட்டி ன்னு நினைச்சீங்களா? நோ நெவர்.. இந்த அனுக்கு நல்லாவே வம்பும் சண்டையும் போடத் தெரியும்..." என்று கூறினாள்.
"ஓ.. அப்ப எனக்கு பக்கா என்டர்டைன்மெண்ட் இருக்கு ன்னு சொல்லு... ரொம்ப நாள் ஆச்சு, டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து.." என்று சிரித்தார் சாரதா..
"என்ன ஆன்ட்டி நீங்க சண்டைப் போடக் கூடாது.. அவனோட அட்ஜஸ்ட் பண்ணி போ.. கொஞ்ச நாள் அவனுக்கு டைம் கொடு.. இப்படி எனக்கு அட்வைஸ் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.. நீங்க என்னடான்னா.." என்று ஆச்சரியப்பட
"புருஷனும் பொண்டாட்டியும் சண்டைப் போடலைன்னா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கவே இல்லன்னு அர்த்தம்.. இந்த பந்தத்துல, ஒரே நாளில் நம்பிக்கை, அன்பு எதுவுமே உருவாகிடாது... கல்யாணம் பண்ணி வெச்சுட்டா காதல் வந்திருமா...??!! இது கமிட்மெண்ட்.. அஸ்திவாரம் பலமா இருந்தா தான், உறுதியா, நம்பிக்கையா, நேசம் எல்லாம் பிணைக்கப்படும்.."
"அது சரி... நான் இன்னும் அவன் மனசை வாங்கவேயில்லை.. அப்புறம் தோண்டனும், அப்புறம் கட்டணும்.. அதுக்கப்புறம் தான் நீங்க சொன்ன மாதிரி அஸ்திவாரம் போட்டு ஸ்ட்ராங்கா உட்கார முடியும்"
"அட போக்கிரி.. இப்ப தானே சொன்னேன்.. ஒரே நாள்ல எதுவும் பண்ண முடியாது.. கவலைப்படாத.. நான் ஹெல்ப் பண்றேன்"
"அதை விடுங்க ஆன்ட்டி.. அப்படி என்ன கண்டிஷன் போட்டீங்க? லவ் பண்ண பொண்ணை விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்?"
"அது" என்று நீட்டி முழக்கியவரை, திடீரென வந்து காப்பாத்தினான் யாழினியன்.
"அம்மா எனக்கு பசிக்குது.... இன்னுமா அவளோட பேசிட்டு இருக்கீங்க?! அவளுக்கும் டயர்ட்டா இருக்கும் ம்மா!! உங்க கதையெல்லாம் அப்புறம் பேசிக்கோங்க" என்றவன்,
அவளிடம், "நீயும் போய் குளிச்சிட்டு வா... ஆனா சீக்கிரம் வரணும்.. அப்புறம் லேட்டா வந்து, சாப்பாடு காலியாயிடுச்சு ன்னா, என்னை குறை சொல்லக்கூடாது" என்று அவளை பார்த்து மயக்கும் பார்வையுடன் கூடியப் புன்னகையை வீசினான்.
சாரதா முன் அவனின் அட்டகாசமான நடிப்பும், புன்னகையும், ஒரு கணம் அவளை விழிதட்டக் கூட மறக்கச் செய்தது.
அர்த்தமுள்ள சிரிப்போடு, சாரதா சமையலறைக்குச் செல்ல, அவனோ, அவள் முன் சொடுகிட்டு இயல்புக்கு கொண்டு வந்தான்.
"டேய் என்னடா இப்படி நடிக்கிற? உன் பேர்ல, நடிப்பு யூனிவெர்சிடியே திறக்கலாம் போல.. ஆனா உன் அம்மாவும் சளைச்சவங்க இல்ல.." என்றவள்
"என் ரூம் எங்க?" என்று அவனிடம் வினவினாள்.
"இந்த ஒரு வருஷத்துக்கு என் ரூம் தான் உன் ரூமும். எந்த ஊர்லயாவது, புருஷன் பொண்டாட்டி தனி அறையில் இருப்பாங்களா?"
"அடேய் விருப்பமில்லாம, கல்யாணம் பண்ணிட்டு, ஆனா ஊன்னா, என்னடா புருஷன் பொண்டாட்டி ன்னு கூவிட்டே இருக்க?" என்று கோபப்பட்டவளை,
"ரிலாக்ஸ் எதுக்கு கத்தற.. திட்டம் போட்டு என்னை ஏமாத்தியிருக்க..? அதுக்கு உன்னை என்ன வேணா பண்ணலாம், குறைந்தபட்சம் உன்னை கொஞ்ச நாள் வதைக்கலாம்" என்றான் ஒரு மாதிரி புன்னகையுடன்.
"நீ கொடுமை படுத்தினா, அதை பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைப்போ? நீ என்னை அடிக்கணும்னு நினைச்சாலே.. நான் உன்னை அடிச்சிடுவேன்.. அண்ட் எனக்கு கராத்தே, சிலம்பம் தெரியும்.. சோ ஜாக்கிரதை.."
"ம்ம்க்கும் கராத்தே தெரிஞ்சா.. பய.. பயந்துடுவோமா" என்றான் வீராப்பாக!
"இந்த வீராப்ப உன்னை ஏமாத்தின ஐஸ்வர்யா கிட்டப் போய் காட்டு.. வந்துட்டான் என்னை பழிவாங்க!!" என்று கொந்தளிக்க, மீண்டும் ஒரு வாய் தகராறு வெடிக்கும் நேரம், நல்லவேளை, சாரதா குரல் கொடுத்தார்.
அப்போது அவனும் சண்டையை ஒதுக்கிவிட்டு, அவள் கையைப் பிடித்து அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள், "அனுலேகா, உனக்கு முக்கியமான விஷயம் ஒன்னு சொல்றேன்.. அதை ஸ்ட்ரிக்டா கடைப்பிடிக்கணும். அம்மா முன்னாடி, எந்த சண்டையும் போடக்கூடாது.. அது எனக்குப் பிடிக்காது" என்று விட்டு வெளியேறினான்.
அவளும் நீண்ட பெருமூச்செறிந்து, விரைவில் உடை மாற்றி, சாப்பிட அமர்ந்தாள்.
சாப்பிடும் போது, "அம்மா.. நானும் இவளும், அவளோட ஹாஸ்டலுக்குப் போய், வெகேட் பண்ணிட்டு திங்ஸ் எடுத்துட்டு வந்திடறோம்"
"யாழ், அதென்ன அவ, இவ ன்னு பேசிட்டு இருக்க? நீ கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணுக்கு பேர் இல்லையா என்ன?"
"அதானே?!! ஏன் ஹார்ப் என் பேரை சொல்லி கூப்பிடலாமே?? .. எனக்கு இந்த 'ஏய்', 'வாடி.. போடி' ன்னு அடைமொழி சொன்னா பயங்கரமான கோபம் வரும்.. ஞாபகம் வெச்சுக்கோ.. அப்புறம் பின் விளைவுகளுக்கு என்னை தப்பு சொல்லக்கூடாது." என்று அவளும் தீ ஏற்ற, அவனுக்கு எங்கேனும் போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
'பேசுடி பேசு... இப்ப உன் நேரம்.. எனக்குன்னு ஒரு காலம் வரும்.. அப்ப இருக்கு உனக்கு ஆப்பு' என்று முணுமுணுத்தவன், தட்டை பார்த்து சாப்பிடத் தொடங்கினான்.
சாரதா, "சாயங்காலம் ஹாஸ்டல் வேலை முடிச்சிட்டு, வரும் போது, வெளியே சாப்பிட்டு வந்திருங்க" என்றார். சாரதா மறுத்துவிட்டார்.
"அப்போ நீங்களும் வாங்க சாரும்மா" என்றாள் அனு. அதை கேட்டு யாழ், ஒரு வகையில் நிம்மதியாக உணர்ந்தான்.
ஹாஸ்டல் காலி செய்து விட்டு, அவளின் உடைமைகள் அடங்கிய பெட்டிகளை, காருக்குள் வைத்தவன், "அவ்வளவு தானா" என்று கேட்க,
"இல்ல இன்னும் சில திங்ஸ் இருக்கு" என்று சொல்லி சென்றாள்.
"இன்னுமா" என்று அவன் ஆயாசமாக கேட்டது, மௌனமாக காற்றில் கரைந்துப் போனது.
ஒரு வழியாக ஹாஸ்டல் வேலையை முடித்து காரைக் கிளப்பியவன், "சாப்பிடப் போலாமா?" என்று வினவ,
"இவ்வளவு சீக்கிரமாவா? நோ என்னால முடியாது... நான் ஒரு ஐடியா சொல்லவா?" என்று காரில் அவனை பார்த்து திரும்பி அமர்ந்தாள்.
"ம்ம்" என்றவனின் பார்வை சென்ற இடம், அவளது லேசாகத் தெரிந்த இடது இடைப்பகுதி தான். அவன் தாயார் அவளுக்கென வாங்கி வைத்தப் புடவையை தான் அப்போதுக் உடுத்தியிருந்தாள்.
அவன் பார்வை சட்டென மாறிய விதத்தை அவளும் அறிந்துக் கொண்டாள்.
உடனே, "என்ன மேன் லுக்கு? எல்லாருக்குமே இடுப்பு இருக்கு.. ஏன் உனக்கும் கூடத் தான் இருக்கு.. அதையும் இப்படி தான் உத்து உத்துப் பார்ப்பியா?" என்று எகிற,
"சாரி" என்று உடனே மன்னிப்பு வேண்டிவிட்டு, "நீ ஏதோ ஐடியா சொல்றேன்னு சொன்னியே.." என்று நினைவூட்ட,
"பீச்க்கு போகலாமா ன்னு யோசிச்சேன்" என்றாள்.
"ம்ம் ஓகே பட் பெசியா (பெசன்ட் நகர் பீச்) மெரினா இல்லனா, இசிஆர் பீச்சா?"
"ஏதோ ஒரு பீச்.." என்று கூறி திரும்பிக் கொண்டாள். அவனது பார்வையும், உடனே மன்னிப்பு வேண்டலும், அதன் பின் சுமுகமான பேச்சும்; அவளை ஏதோ ஒன்று குறுகுறுக்கச் செய்தது.
அவன் தன் காரை, சென்னை இசிஆர் ஜூஹூ பீச்க்கு செலுத்தினான்.
சுத்தமான கடற்கரை என்று பெயர் பெற்ற சென்னை ஜூஹூ பீச்சில் பலர், காம்பிங் மற்றும் டெண்ட் அடித்து ஒரு இரவு முழுக்க, கொண்டாடுவர். அனேக வெட்டிங், லவ் ஃபோட்டோ ஷுட் அங்கே எடுக்கப்படும்.. பின் மாலை, இரவு நேரங்களில், அதிக போலீஸ் கெடுபிடியும் உண்டு. பேட்ரோல் வண்டி வந்துக் கொண்டே இருக்கும்.
அங்கே இறங்கி சற்று நேரம் நடந்தனர். கடலலையும், காற்றும், கால் புதையும் ஈர மணலும், புத்துணர்வு தந்ததோ!, இருவரும் ரசித்து நடக்க, கடலலை கால்களை நனைத்து சென்றதை சுகமாக அனுபவித்தனர்.
ஒரு இடத்தில், அவள் கால் அலையில் வழுக்க, முன்னே விழப்போனவளை, அவனது ஒரு கை, அவள் முழங்கையைப் பிடிக்க, மற்றொரு கை, அவளது இடுப்பைப் பிடித்தது.
சற்றே தொலைவில், இவர்கள் நிற்கும் விதத்தை, கண்ட இருவரில் ஒருவர், அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்துவிட்டு, "வா போகலாம்" என்று அவர்களுக்குள் பேசி, வந்த சுவடுத் தெரியாமல் நகர்ந்து சென்றனர்.
"பார்த்து நடக்க மாட்டியா" என்று கடிந்தவனை, ஒரு மாதிரி பார்த்து, "நான் என்ன வேணும்னா விழுந்தேன்.." என்று குறைப்பட்டுக் கொண்டே மணலில் போய் அமர்ந்து விட்டாள்.
அவனும் அவள் அருகில் சென்றவன், இடைவெளி விட்டு அமர்ந்தான்.
அவளோ, அருகில், மணலில், மனம் போன போக்கில், விரல்களால் கோலம் போட, அவனோ அவளையே பார்த்திருந்தான்.
"அவ்வளவு தானா கடல் மேல ரசிப்புத் தன்மை..?! கிளம்பலாமா?"
"ப்ச்.."
"இப்ப என்ன ஆச்சு.. எதுக்கு சலிச்சுக்கற?"
"ஒன்னுமில்ல.. அம்மா, அப்பா, அக்கா ஞாபகம் வந்திருச்சு..."
"ஓ.. மறக்க முடியாது தான்.. கசப்பான விஷயங்களை ஒதுக்கீட்டு, அவங்களோட வாழ்ந்த, சந்தோஷமான தருணங்களை நினைச்சு பார்க்கலாம் தானே?!"
"ம்ம்ம்.. ஈஸியா சொல்லிடலாம்.. ஆனா அனுபவிக்கறவங்களுக்கு தான், அதோட வலி, துக்கம் எல்லாம் புரியும்.." என்றாள் விரக்தியாக.
அவனோ, ஆறுதலாக, அவளது தோளை தட்டப் போனவன், திடீரென, தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவளும் அவன் செயலை எதிர்க்கவில்லை.
"உனக்கு அழனும் ன்னு தோணிச்சுன்னா, இப்ப, இங்கேயே அழுதுடு.. மனசுக்கு கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகும்" என்க, அவளோ கோபமாக நிமிர்ந்தாள்.
"இப்ப இவ்ளோ பேசறல்ல??!!.... அன்னிக்கு அவங்களை கடைசியா ஒரு தடவை பார்க்கக் கூட வரலை.. சாவுக்கு வராதவன் இப்ப ஆறுதல் சொல்லத் தேவையில்லை" என்று எழுந்தவள், வேகமாக நடந்தாள்.
அவனும் ஒன்னும் சொல்ல இயலாமல், அவள் பின்னே நடந்தான். அவன் காரணத்தை இப்போதுக் கூறுவது அபத்தமாகத் தோன்றியது.
பீச்சை கடந்து கார் அருகில் போய் நின்றவளுக்கு, அப்போது ஏனோ உறுத்தியது. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள். ஆனால் ஒன்னும் புலப்படவில்லை.
அதற்குள் அவனும் வந்துவிட, காரில் ஏறி கிளம்பினார்கள். அவனோ சங்கடமான அமைதியை கலைக்க விரும்பி, "நீ என்ன பண்ற?"
"நான் வேடிக்கை பார்க்கிறேன்" என்றாள்
"என்ன ஜோக்கா? வாழ்வாதாரத்துக்கு நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேட்டேன்?"
"நான் ஜெர்னலிஸ்ட்"
"ம்ம்ம். நல்ல பீல்ட் தான் ஆனா சேப்டி முக்கியம்.. ஜாக்கிரதை" என்றான்.
"ம்ம்ம் ம்ம்ம்" என்றவள், காரின் ரியர் கண்ணாடியில் தெரிந்த பின்னாடி வரும் வாகனத்தை கவனித்தாள். 'இசிஆர் இல், எல்லாம் வாகனமும் பின் தொடர்வது போல தானே தெரியும்.. எங்கேயும் திருப்பமோ, வளைவோ இல்லையே!!. என் அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம்' என்று மனதுள் எண்ணினாள்.
ஆனால் அவள் எண்ணம் தவறு. அந்த வாகனம் அவர்களை தான் பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. முக்கியமாக அவளை வேவு பார்க்கவே அந்த பின்தொடர்தலும்.
உணவுக்கு, ஒரு பீச் வியூ ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் அவர்களை பின் தொடர்ந்து வந்து நின்றது மற்றொரு கார். அதை கவனித்தாள் அனுலேகா.. இப்போது அவளுக்கு சந்தேகம் வலுத்தது. ஆனால் அந்த கார் அங்கே இருந்து உடனடியாக சென்று விட்டது.
உள்ளே சென்ற யாழ்-அனு ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். பரிசாரகனிடம் மெனு சொல்லிவிட்டு சுற்றுப்புறத்தை ரசிக்கத் தொடங்கினர்.
"ஹார்ப் (யாழ்) நீ அடிக்கடி இங்க வருவியா?"
"ரொம்ப இல்ல.. ஒன்னு ரெண்டு தடவை அனு கூட இங்க வந்திருக்கேன்" என்றான்.
அவன் சாதாரணமாக சொன்னானோ என்னவோ! அவளுக்கு உள்ளே ஊசியாகக் குத்தியது. அதை புறக்கணித்து, அவனிடம், "ஐஸ்வர்யாவை நீ எங்கே பார்த்த? எப்படி பழக்கம்?"
"ஏன் இதெல்லாம் உன்கிட்ட சொன்னதில்லையா உன் ஃப்ரெண்டு?" என்று எகத்தாளமாக கேட்டான்.
"நான் அவளோட ரொம்ப நெருக்கம் கிடையாது!! பெர்சனல் விஷயம் நானா ஆராய்ந்தது இல்ல.."
"ஓ.. நெருக்கமே இல்லாத, சக அறைவாசிக்காக, அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி, கல்யாணத்தை நிறுத்த வந்தியா.. வாவ்" என்று நக்கலாக வினவ,
அவளோ, "அதே தான் எனக்கும் புரியல.. சரி நாம ஒரு டீலுக்கு வரலாமா?" என்று தான் கைகளை மேஜை மேல ஊன்றி, சற்று முன்னே சாய்ந்து கேட்க, அவனும் அதே போல, முன்னே டேபிள் பக்கம் சாய்ந்து "என்ன" என்று கேட்க,
"உனக்கும் எனக்கும் சின்ன வயசுலேயிருந்து பழக்கம்.. நாம விரோதி கிடையாது. ஒருத்தரை ஒருத்தர் ஐஸ்வர்யா செஞ்ச காரியத்துக்கு சாட்சி சொல்லாம, நண்பர்களா பழகலாமா?"
"....." அவளை சந்தேகமாக முகத்தை சுழித்து நோக்க,
"டிவோர்சுக்கு அப்புறம், முகத்தை திருப்பிக்கிட்டு, யாரோ மாதிரி இல்லாம, சிரிச்ச முகமா பிரியலாமே.. அட்லீஸ்ட், உன் அம்மாக்காக நாம் சுமூகமான உறவில் தான் இருக்கோம் ன்னு காட்டிக்கிட்டா, அவங்க நிம்மதியா இருப்பாங்க.. ஆன்ட்டி ஏதோ கண்டிஷன் போட்டதா சொன்னாங்க.." என்று வழி கூறினாள்.
அவனும் அதனை அமோதித்து "அவங்களுக்கு ஹெல்த் பிரோப்ளம் இருக்கு.." என்று மட்டும் கூறியவன்,
"நீ சொன்ன மாதிரி, பழைய ஃப்ரெண்ட்ஷிப்பை புதுப்பிக்கலாம்.. டீல்" என்று இருவரும் கைகுலுக்கி குதூகலமாக உணவுக்கு தயாரானார்கள்.
இந்த ஒரு வருடம் கழித்து, "நாங்கள் பிரியப்போகிறோம்" என்று சொன்னால், அம்மா மனது வருத்தப்படாதா..!! தற்காலிக சந்தோஷம் எவ்வளவு இன்பத்தை அளித்து விடப் போகிறது? என்கிற சின்ன யோசனை அன்றி, இருவரும் டீல் பேசினார்கள்.
ஆனால் அங்கே விதி விளையாடி விட்டதே!!
Very nice updatema
ReplyDeleteVayadiyum avanum podum sandai sema 🤣🤣🤣