Posts

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 7

Image
அத்தியாயம் - 7 தன் தொழில் தொடர்பில், உருவாகிய எதிரி, தன்னை அழிக்க வல்ல பொறிகளை ஆராய்ந்து, திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அனு, தன் வேலைகளை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தாள். ஹரிஷிடம் கூறியதுப் போல, இரு நாட்கள் கழித்து, அவனோடு வெளியே செல்வதால், இன்று முக்கியமான விடயத்துக்காக, அபாயம் இருந்தாலும், துணிந்து செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து, செயலில் இறங்கினாள். "ஆன்ட்டி, என் வேலை விஷயமா வெளியேப் போறேன்... வர எப்படியும் லேட்டாகும்.. அண்ட் போன் சைலெண்ட்ல போட்டிருப்பேன்.. கூடுமான வரைக்கும் எனக்கு கால் பண்ணிடாதீங்க" என்று அனு, கூறியபடியே வெளியே செருப்பை மாட்ட,  சாரதா, "பார்த்து பத்திரமா இரு.. ஜாக்கிரதை.. பெப்பர் ஸ்பிரே.. ஸ்டன் கன் எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்று எச்சரிக்கை கலந்த கவலையுடன் வினவ, அவளோ சிரித்தாள். "ஐயோ ஆன்ட்டி, இத்தனை வருஷம் என்னை நானே தான் பாத்துக்கிறேன்.. இனிமேலும் அப்படித் தான்.. அதனால, அனாவசியமா கவலைப்படாம இருங்க..." என்றவள், மாலையில் கிளம்பிவிட்டாள்.  அவள் கிளம்பிய ஒருமணி நேரத்தில், வீடு வந்து சேர்ந்தான் யாழ். தன்னை ஆசுவாச...

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 6

Image
அத்தியாயம் - 6 அவர்கள் ஆடர் செய்த உணவுகள் மேஜையில் வரிசைப்படுத்தி வைத்து விட்டு, அவன் கையில் இருந்த மீதி உணவுகளோடு, அடுத்த மேஜைக்கு நகர்ந்து சென்றான் பரிசாரகன்.  யாழினியன் தனக்கு வேண்டிய உணவுகளை சுவைப் பார்க்க, அனு தான் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கனை வாயில் வைத்த சில வினாடிகளில், 'உஸ்', 'உஸ்' என்று வாயை குவித்து, ஊத, யாழினியன், அவளுக்கு காரம் தாங்கவில்லை என்று உணர்ந்து, அவனும் அதனை எடுத்து வாயில் போட்டான்.  போட்டதில், காரத்தை உணர்ந்து அவன் தண்ணியை குடித்து நாக்கை குளிர வைக்க, அப்போது பக்கத்து மேஜையில் சத்தம் ஓங்கி கேட்டது. அவர்கள் உணவில் உரைப்பு மிகவும் கம்மியாக இருப்பதாக புகார் தெரிவிக்க, பரிசாரகனை அழைத்தான் யாழினியன். உணவு தட்டு மாறிவிட்டதாகக் கூறி, அவர்களை சாந்தப்படுத்த விழைந்தான்.  இங்கே அனுவோ, மொடாக் மொடாக் என, தண்ணீரை குவளை குவளையாக, தொண்டைக்குள் இறக்கினாள் ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.  அவளை பார்ப்பதற்கே பாவமாக தோன்றியது அவனுக்கு. உதடு சிவக்க, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. உணவை பார்சல் செய்து தருமாறு கேட்டவன், பில்லை செலுத்தி விட்டு, அவளை அழைத்துக் கொ...

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 5

Image
அத்தியாயம் - 5 "அனு.. உன்கிட்ட ரொம்பவே முக்கியமான விஷயம் பேசனும்" என்று சாரதா கூறவும்,  அனுவும், "என்ன ஆன்ட்டி" என்று கேட்டாள். கூடவே, நடந்த திருமணத்தைப் பற்றி தான் கேட்கப் போகிறாரோ?! என்கிற ஐயமும் மனதுள் தோன்றியது. "யாழ்க்கு உன்னோட நடந்தது விருப்பமில்லாத கல்யாணம் தான். அதுவும் என்னோட கண்டிஷனால தான், அவன் ஒத்துக்கிட்டான்னும் எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா அவனோட இயலாமையைக் காரணம் காட்டி உன் மேல கோபப்படலையே?" என்று கவலையுடன் வினவியரை, குழப்பத்துடன் நோக்கினாள். "அப்படி எதுவுமே இல்லை ஆன்ட்டி.. எனக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செஞ்சுக் கொடுத்தான். என் கூட ஷாப்பிங் வந்து ட்ரெஸ் செலக்ட் பண்ணிக் கொடுத்தான்" என்று உண்மையும் பொய்யும் கலந்துக் கூறியவள்,  மாமியாரை தலை சாய்த்துப் பார்த்து, குறும்புடன், "அப்படியே அவன் கோபப்பட்டாலும், இன்னும் என்னை எதற்கெடுத்தாலும் அழற உங்க அனுக்குட்டி ன்னு நினைச்சீங்களா? நோ நெவர்.. இந்த அனுக்கு நல்லாவே வம்பும் சண்டையும் போடத் தெரியும்..." என்று கூறினாள். "ஓ.. அப்ப எனக்கு பக்கா என்டர்டைன்மெண்ட் இருக்கு ன்னு ...

கல்யாண சம்பந்தம் அத்தியாயம் 2

அத்தியாயம் - 2 அம்மா அம்மா... அம்மாஆஆஆ" "ஏன்டா ஏலம் போடற..? இங்க தான இருக்கேன்..." "அப்ப ஒரு தடவை கூப்பிட்டதுக்கே, 'என்ன' ன்னு கேட்டிருக்க வேண்டியது தானே...??" "ஆமா நீ கூப்பிடறது எருமை மாடு,  'ம்ம்மா' ன்னு கத்தின மாதிரியே இருந்துச்சு டா.. அதான் எனக்கு ஒரு டவுட்ல (doubt) திரும்பி என்னன்னு கேட்கலை... இப்ப சொல்லு எதுக்கு கூப்பிட்ட??" என்று மகனை கேலி செய்துவிட்டு, எதுக்கு அழைத்தான் என்றும் கேட்டார். "சந்தடி சாக்குல என்னை எருமை மாடு ன்னு திட்டிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி என்னன்னு கேட்கிற... நீ சீரியல் பார்த்து பார்த்து நல்ல நடிக்க கத்துக்கிட்ட அம்மாவ்" என்க, "ஐயையோ மறந்தே போயிட்டேன்... " என்று பதறியடித்து ஹாலுக்கு நகர்ந்தவரை, தடுத்து என்னவென்று விசாரித்தான் மகன். அவரின் தவிப்பு அவனுக்கு கிலியை கொடுதத்ததோ...!! "என்னமா என்ன ஆச்சு.??. நீ ஏதோ மறந்த விஷயம் உனக்கு ஞாபகம் வந்துருச்சா" என்று பதற, "ஆமா டா.. 'அவள் மென்மையானவள்' ன்னு ஒரு சீரியல்.. ஏற்கனவே பத்து நிமிஷம் போயிடுச்சு.. என்னங்க அடுப்புல சாம்பார் ...