ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - 5

அத்தியாயம் - 5 "அனு.. உன்கிட்ட ரொம்பவே முக்கியமான விஷயம் பேசனும்" என்று சாரதா கூறவும், அனுவும், "என்ன ஆன்ட்டி" என்று கேட்டாள். கூடவே, நடந்த திருமணத்தைப் பற்றி தான் கேட்கப் போகிறாரோ?! என்கிற ஐயமும் மனதுள் தோன்றியது. "யாழ்க்கு உன்னோட நடந்தது விருப்பமில்லாத கல்யாணம் தான். அதுவும் என்னோட கண்டிஷனால தான், அவன் ஒத்துக்கிட்டான்னும் எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா அவனோட இயலாமையைக் காரணம் காட்டி உன் மேல கோபப்படலையே?" என்று கவலையுடன் வினவியரை, குழப்பத்துடன் நோக்கினாள். "அப்படி எதுவுமே இல்லை ஆன்ட்டி.. எனக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செஞ்சுக் கொடுத்தான். என் கூட ஷாப்பிங் வந்து ட்ரெஸ் செலக்ட் பண்ணிக் கொடுத்தான்" என்று உண்மையும் பொய்யும் கலந்துக் கூறியவள், மாமியாரை தலை சாய்த்துப் பார்த்து, குறும்புடன், "அப்படியே அவன் கோபப்பட்டாலும், இன்னும் என்னை எதற்கெடுத்தாலும் அழற உங்க அனுக்குட்டி ன்னு நினைச்சீங்களா? நோ நெவர்.. இந்த அனுக்கு நல்லாவே வம்பும் சண்டையும் போடத் தெரியும்..." என்று கூறினாள். "ஓ.. அப்ப எனக்கு பக்கா என்டர்டைன்மெண்ட் இருக்கு ன்னு ...